இன்று 2015 பிப்ரவரி 20 வெள்ளியன்று 3 நேரடி தமிழ்த் திரைப்படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.
1.சண்டமாருதம்
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனமும், ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடித்திருக்கிறார்.
மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, ‘காதல்’ தண்டபாணி, நளினி, டெல்லி கணேஷ் , மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், ‘கானா’ உலகநாதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதியிருக்கிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார்.
ஒளிப்பதிவு – N.S.உதய்குமார், இசை – ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ, எடிட்டிங் – V.T. விஜயன், கலை – ரூபேஷ், ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா, நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா, தலைமை செயல் அதிகாரி – பா..சக்திவேல், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – A.N.சுந்தரேசன், தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன், தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், வசனம் இயக்கம் – A.வெங்கடேஷ் .
2. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்
வி.எல்.எஸ்.ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் படம் இது. ‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா(புது முகம்), எதிர் நீச்சல் சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். வனராஜ் கலை இயக்கம் செய்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநரான சரவணனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்து, பல விளம்பரப் படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
3. கதிர் கஞ்சா கருப்பு (K3)
காமதேனு இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை – பிரத்வய் சிவசங்கர், பாடல்கள் – இயக்குனர் ரவிசங்கர், எடிட்டிங் – கே.தணிகாசலம், நடனம் – அஜய்சிவசங்கர், கலை – கதிர் பத்மநாபன், தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.அருணாச்சலம், தயாரிப்பு – காமதேனு இண்டர்நேசனல், இணை தயாரிப்பு – என்.திருமுருகன், வி.பிரகாஷ்ராஜ், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் – எம்.எஸ்.அண்ணாதுரை.
4. டெத் வாரியர் – ஆங்கில டப்பிங் படம்












