இன்று 2014, டிசம்பர் 19 வெள்ளியன்று 6 நேரடி தமிழ்த் திரைப்படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.
1. பிசாசு
இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம். இதில் படத்தில் புதுமுக நடிகர் நாகா ஹீரோவாகவும், பிரயகா அறிமுக நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியன் பாடல் எழுதியிருக்கிறார். கோபிநாத் எடிட்டிங் செய்திருக்கிறார். நேதன் லீ சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.
2. சுற்றுலா
பர்பிள் விஷன் ஜெயக்குமார் புரொடெக்சன்ஸ் சார்பில் வெங்கட்ராம், ரவிக்குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெம் ஜெனூன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் ரிச்சர்ட், மிதுன், பிரஜன், சான்ட்ரா, ஸ்ரீஜி, அங்கீதா, சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கின்றனர். ரவி ஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரணி இசையமைத்திருக்கிறார். சினேகன், விவேகா, அண்ணாமலை ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர். ராஜேஷ் ஆல்பிரட் எழுதி, இயக்கியிருக்கிறார்.
3. பெண்ணின் கதை
கே.ஆர்.பி. புரொடெக்சன்ஸ் சார்பில் கே.ராஜன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ராம்கி மற்றும் சில புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். சுபாஷ் இசையமைத்திருக்கிறார். பாபு கணபதி இயக்கியிருக்கிறார்.
4. நாடோடிப் பறவை
தனம் பிக்சர்ஸ் சார்பில் படூர் எஸ்.ரமேஷ் தயாரித்திருக்கிறார். வி.கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.தமன் இசையமைத்திருக்கிறார். டி.விஜயராகவ சக்கரவர்த்தி எழுதி, இயக்கியிருக்கிறார்.
5. சினிமா ஸ்டார்
ஸ்ரீதனலட்சுமி புரொடெக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த சின்ன பட்ஜெட் படத்தை ஜி.நானி என்பவர் இயக்கியிருக்கிறார்.
6. நட்பின் நூறாம் நாள்
இந்தப் படத்தை ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி தயாரித்திருக்கிறது. இதில் விஜய சிரஞ்சீவி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். எஸ்.பி.அஹமது ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜா தேசிங்கு எழுதி, இயக்கியிருக்கிறார்.
7. BEAUTY AND THE BEST – தமிழ் டப்பிங்