இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஆகஸ்ட் 8, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஆகஸ்ட் 8, 2014

ஆகஸ்ட் 8, 2014 வெள்ளிக்கிழமையான இன்று  4 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியிருக்கின்றன.

1. பரணி

bharani-tamil-movie-stills-23

ஜெஆர்பி எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் ராஜபிரபு, லீலாகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை மாவணன் இயக்கியிருக்கிறார்.  இதில் ராஜபிரபு, உமாஸ்ரீ, லீலாகுமார், விஜய் கதிர், ராகவி, சாரதி, தேவிபிரியா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பிரபுசாமியும், நாகராஜனும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். செந்தி மோகன்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

2. மைதிலி

maithili_001

2 வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம். ஒரு வழியாக இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது. டார்வின் பிக்சர்ஸும், ஹானுசினி கிரியேஷன்ஸும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இதில் நடிகை சதா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நவ்தீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். விகாஷ் இசையமைக்க.. சூர்யராஜன் எழுதி, இயக்கியிருக்கிறார்.

3. அக்னி

ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடத்தின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது அக்னி என்ற திரைப்படம். குருநாதன் தயாரிக்க ஏ.ஜெ.ஆர். ஹரிகேசவா இதனை எழுதி, இயக்கியிருக்கிறார். 

4. காமேஷ்வரி

‘இவளின் மன்மத லீலை’ என்கிற அடைமொழியோடு பிட்டு படம் ஓடம் தியேட்டர்களில் மட்டும் இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது. எழுதி, இயக்கியிருப்பவர் செல்வா.  தயாரித்திருப்பவர் வம்சி.

5. இன் டு த ஸ்டோர்ம் – இந்த ஆங்கிலப் படத்தின் தமிழ் ரீமேக்கும் இன்று வெளியாகியுள்ளது.

Our Score