இன்று ஆகஸ்ட் 22, 2014 வெள்ளியன்று 3 நேரடி தமிழ்த் திரைப்படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
1. கபடம்
மௌண்டன் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சோழா பொன்னுரங்கம் வெளியிடும் படம் இது. சச்சின், அங்கனா ராய், ஆதித்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சாஷி இசையமைத்திருக்கிறார். ஜோதி முருகன் இயக்கியிருக்கிறார். Across The Hall என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி.
2. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
ராஜம் புரொடெக்சன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமியும், எஸ்.மோகனும் இணைந்து தயாரித்தியிருக்கிறார்கள். 20-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கும் படம். பரத், நந்திதா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா. சைமன் இசையமைத்திருக்கிறார். எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கிறார்.
3. தொட்டால் விடாது
பிகாசஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அஜித் ரவி பிகாசஸ், சனம் பிரசாத், சம்ஷிவா, நான்சி குப்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இசை – வினோத் வேணுகோபால் அஜித் ரவி பிகாசஸ் இயக்கியிருக்கிறார்.
4. எக்ஸ்பென்டபிள்ஸ்-3
ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகிறது..!