இன்று 2015 ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.
1. ஜிகினா
ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே.டி.கே. தயாரித்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சுபாஷ்சந்திரபோஸ் இதனை வெளியிட்டுள்ளார்.
இதில் விஜய்வசந்த், சானியாதாரா இருவரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். மேலும் கும்கி அஷ்வின், சிங்கம்புலி, தேவி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். பாலாஜி வி.ரங்கா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்திருக்கிறார். ஜோன் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். இயக்குநர் நந்தா பெரியசாமி இந்த படத்தை கதை, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
2. திகார்
பியானோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரேகா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். பார்த்திபன், பிரியங்கா, உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ்.கே.ஜெயன், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சேகர்.வி.ஜோசப், இசை – ஆர்.ஏ.ஷபீர், எடிட்டிங் -வி.ஜெய்சங்கர், நடனம் – தினேஷ், ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா, பாடல்கள், எழுத்து இயக்கம் – பேரரசு, தயாரிப்பு – ரேகா.
3. இவங்க அலுச்சாட்டியம்
நிசா பிக்சர்ஸ் சார்பில் விஜய்குமார் தயாரித்திருக்கிறார். அதிகம் புதுமுகங்களே நடித்திருக்கும் சின்ன பட்ஜெட் படம் இது. ஒளிப்பதிவு – நித்யன் கார்த்திக், இசை – வி.டி.ராஜா, எடிட்டிங் – அப்துல் பாசில்.
வீரபாண்டிய கட்டபொம்மன் – (Re Release in Digital)
டிராகன் – (ஆங்கில டப்பிங் படம்)