இன்று ஆகஸ்ட் 1 2014, வெள்ளியன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.
1. சரபம்
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படம் இது. முண்டாசுப்பட்டி கொடுத்த நம்பிக்கையில் மிகக் குறுகிய காலத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். நவீன் சந்திரா, சலோனி லுதரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார். அருண்மோகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
2. ஜிகர்தண்டா
இன்றைக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இது. ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களை தயாரித்த குரூப் கம்பெனியின் சார்பில் எஸ்.கதிரேசன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். பீட்சா படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் அடுத்த படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
3. சண்டியர்
உயிர்மெய் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. புதுமுகங்கள் ஜெகன், கயல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். யதீஷ் மஹாதேவ் இசையமைக்க சோழதேவன் இயக்கியிருக்கிறார்.
4. முதல் மாணவன்
முற்றிலும் புதுமுகங்களே நடித்திருக்கும் படம் இது. ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. கோபி காந்தி, ஐஸ்வர்யா, தனு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜெஸ்ஸி இசையமைத்திருக்கிறார். கோபி காந்தி இயக்கியிருக்கிறார்.
இது தவிர ஹெர்குலிஸ் என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு இன்றைக்கு ரிலீஸாகியிருக்கிறது.