இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 24, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 24, 2015

இன்று 2015, ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.

1. கங்காரு

Kangaroo-Movie-Posters

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சார்பில்  ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின்  தங்கையாக  பிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக  வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.

மேலும்  தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு,  இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்  இயக்குநர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்.  சாமி இயக்கியுள்ளார்.

2. யூகன்

Yoogan-poster-1

ஜி.கமல்குமார் என்ற புதியவர் தயாரித்து, எடிட்டிங் செய்து, இயக்கியிருக்கும் புதிய படம் யூகன். இந்தப் படத்தில் யாஷ்மித், ஜிஆர்என் சித்து, ஷியாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, சாக்ஷி அகர்வால், ஆய்ஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ரவி ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஷாந்த் அர்வின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அலெக்ஸ் பிரேம்நாத் பின்னணி இசையமைத்திருக்கிறார். ரதி கலரிஸ்ட் பணியைச் செய்திருக்கிறார்.

3. இரிடியம்

iridiyam-movie-first-look-photos

குவாட்ரா மூவிஸ் சார்பில் தாழை எம்.சரவணன் தயாரித்திருக்கிறார்.  இப்படத்தில் புதுமுகம் மோகன் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆருஷி நடித்திருக்கிறார். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் பாவா லட்சுமணன், கும்கி அஸ்வின், யோகி பாபு, மதுமிதா, ஐஸ்வர்யா என பலரும் நடித்திருக்கிறார்கள். கோபி சபாபதி ஒளிப்பதிவு செய்ய, ஷாய் முகுந்தன் இயக்கியிருக்கிறார்.

4. நீதானே என் கோவில்

நாகு கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.ராஜமாணிக்கம், என்.ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாய்குருநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புகழேந்தி இசையமைத்திருக்கிறார். என்.பத்து என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

அவெஞ்சர்ஸ்-2 – ஆங்கில டப்பிங்

Our Score