full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 2, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 2, 2015

இந்த வாரம் சற்று வித்தியாசமானதுதான்..!

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரையிலும் விடுமுறை தினங்களாக வந்துவிட்டதால் தங்களது புதிய படத்தை வெள்ளிக்கிழமைக்கு முன்பாகவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் கொம்பன், நண்பேன்டா, சகாப்தம், சட்டம் என் கையில் ஆகிய நான்கு படங்களும் வெவ்வேறு தேதிகளில் ரிலீஸாகியுள்ளன. கூடவே FAST & FURIOUS ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.

1. கொம்பன் – ஏப்ரல்-1, 2015

‘கொம்பன்’ படத்திற்கு புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்குச் சென்றதால் பரபரப்பு கூடியது. இதன் விளைவாக முன்பு திட்டமிடப்பட்டிருந்த ஏப்ரல் 2-ம் தேதிக்கு பதிலாக அதற்கு முதல் நாள் ஏப்ரல்-1-ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார்கள். அன்று மதியம்தான் கோர்ட்டின் தடையில்லை என்கிற தீர்ப்பு கிடைத்த்தால், ஏப்ரல் 1-ம் தேதி மாலை காட்சி முதல் இந்தப் படம் தமிழ்நாட்டில் ரிலீஸானது.

komban-ad

ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். கார்த்தி, லட்சுமிமேன்ன், ராஜ்கிரண், கருணாஸ், கோவை சரளா, வேல ராமமூர்த்தி, சூப்பர் சுப்பராயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங், கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – கே.வீரசமர், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், எழுத்து-இயக்கம் – முத்தையா.

2. நண்பேன்டா – ஏப்ரல் 2, 2015

nanbenda-film-images

ரெட்ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார். இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். நயன்தாரா ஹீரோயின். மேலும் சந்தானம், சாயாஜி ஷிண்டே, ரஞ்சனி, நான் கடவுள் ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், எடிட்டிங் – விவேக் ஹர்ஷன், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் – வைரமுத்து, கார்க்கி, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை, விஜயாசாகர், கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – பிருந்தா, தினேஷ், எழுத்து-இயக்கம் – ஏ.ஜெகதீஷ்.

3. சகாப்தம் – ஏப்ரல் 2, 2015

sahaptham movie-1

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்திருக்கிறார். இதில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கிறார். நேகா ஹிங்கி, சுப்ரா அய்யப்பா ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.

மேலும் நண்டு ஜெகன், சுரேஷ், ரஞ்சித், தேவயானி, சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், தலைவாசல் விஜய், சண்முகராஜன், போஸ் வெங்கட், முத்துக்காளை, ரேகா சுரேஷ், ராஜேந்திரநாத் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – பூபதி, எடிட்டர் – எஸ்.பி.அஹமது, சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், கலை இயக்கம் – ஜிகே, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, நோபில் சைரஸ், ஆர்.கே.ஹபீப், இசை – கார்த்திக்ராஜா, பாடல்கள் – பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, பார்த்தி பாஸ்கர், கதை-திரைக்கதை – நவீன் கிருஷ்ணா, வசனம் – ரா.வேலுமணி, இயக்கம் – சுரேந்திரன்.

4. சட்டம் என் கையில் – ஏப்ரல் 2, 2015

புதுமுகங்களே அதிகம் நடித்து சப்தமில்லாமல் வெளியாகியிருக்கும் படம் இது. லயன் சி.முத்து தனது சுடலைமாடன் மூவிஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.  ஒளிப்பதிவு – ஜி.மாதவன், எடிட்டிங் – ராம்நாத், இசை-பாடல்கள் – அமுதரதி, வசனம் – ராதாகிருஷ்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் – இராம செல்வ கருப்பையா.

FAST & FURIOUS – 7 – ஆங்கில டப்பிங் படம்

 

Our Score