இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 17, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஏப்ரல் 17, 2015

இன்று 2015 ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலிஸாகியுள்ளது.

1.ஓ காதல் கண்மணி

Oh-Kadhal-Kanmani-Movie-Poster (1)

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இயக்குநர் மணிரத்னமே தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். நடன அமைப்பு – பிருந்தா.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2. காஞ்சனா-2

ஸ்ரீராகவேந்திரா புரொடெக்சன்ஸ் சார்பில் இயக்குநர் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியிருக்கும் படம்  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Kanchana-2-Movie-Stills-12

இதில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, மயில்சாமி, ஸ்ரீமன், மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – ராஜவேல் ஒளிவீரன், இசை – எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா, எடிட்டிங் – டி.ஈ.கிஷோர், நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பாராயன், எழுத்து, இயக்கம் – ராகவா லாரன்ஸ்

அவெஞ்சர்ஸ் – ஆங்கில திரைப்படம்

Our Score