full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – 2015, மார்ச் 27

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – 2015, மார்ச் 27

இன்று 2015, மார்ச் 27 வெள்ளிக்கிழமையன்று 5 நேரடி தமிழ்ப் படங்களும் 3 ஆங்கில டப்பிங் படங்களும் வெளியாகியுள்ளன.

1.CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

S.S. ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குநர் சத்தியமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹானி ஆகியோர் நடித்துள்ளனர்.

jaiguhani

ஒளிப்பதிவு – சரவணன், ஜி.மனோகரன், இசை – சித்தார்த்தா மோகன், படத்தொகுப்பு – பி.செளந்தர்ராஜன், ஆர்.வி.ஜெகன், கலை – ஜி.வீரமணி, வசனம் – கோவி.லெனின்.

2. வலியவன்

S.K. ஸ்டியோஸ் சார்பில் K.N.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் ‘வலியவன்’.

Valiyavan-Movie-Poster

இதில் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், பாலா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ‘எங்கேயும் எப்போதும்’, விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இயக்கியிருக்கிறார்.

ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணா, இசை – டி.இமான், கலை – ராஜா மோகன், படத்தொகுப்பு – சுபாரக், பாடல்கள் – நா.முத்துக்குமார், நடனம் – பிருந்தா, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் செல்வா, தயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்

3. சரித்திரம் பேசு

அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘சரித்திரம் பேசு’. ‘அகிலன்’ படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு இதில் ஜோடி கிடையாது. இளம் ஜோடிகளாக கிருபா –  கன்னிகா இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

sarithiram-pesu-movie-stills-2

‘பதினெட்டாம் குடி’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ்  இதில் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். ‘பசங்க’ படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் ஒரு ஹீரோயினாக நடித்திருக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ், செல்லத்துரை, கிரிக்கெட் மூர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –   ஜெகதீஷ்  – வி.விஸ்வம், இசை   –  ஜெயகுமார், எடிட்டிங்  –   லட்சுமணன் – ரோம், பாடல்கள்-யோகேஸ்வரன் போஸ், ஜெயகுமார், பசுபதி அழகப்பன், பேராசிரியர்  ஜெயபால், ஸ்டாலின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஸ்ரீமகேஷ். தயாரிப்பு   –   யோகேஸ்வரன் போஸ்.

4. நதிகள் நனைவதில்லை

வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘நதிகள் நனைவதில்லை’. இதில் கதாநாயகனாக பிரணவ், கதாநாயகிகளாக மோனிகா, ரிஷா நடித்துள்ளனர்.

மேலும் கல்யாணி நாயர், செந்தில், பாலாசிங், மதுரை முத்து, டவுட் செந்தில், நெல்லை சிவா, பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சீதாராமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Nadhigal-Nanaivathillai-Movie-Stills-2

இசை – சௌந்தர்யன், ஒளிப்பதிவு – கார்த்திக்ராஜா, சண்டை பயிற்சி -தவசிராஜ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.இராமச்சந்திரன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

5. மனதில் ஒரு மாற்றம்

கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால் முத்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளனர்.  இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Madhan Mohan in Manathil Oru Maatram Movie Wallpapers

ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

‘வல்லினம்’ படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற V.J..சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குநர் மயில் கிருஷ்ணன். ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நான் சத்ரியன் (கன்னட டப்பிங் படம்)

டிராகன் லேட் (ஆங்கில டப்பிங் படம்)

தி டார்க் லர்க்கிங் (ஆங்கில டப்பிங் படம்)

Our Score