2014, ஜூலை 11 வெள்ளிக்கிழமையான இன்றைக்கு 4 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியிருக்கிறது.
1. ராமானுஜன்
கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று படம். இதில் அபிநய் ராமானுஜனாக நடித்திருக்கிறார். மற்றும் சுஹாசினி, நிழல்கள் ரவி, பாமா, அப்பாஸ், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ரமேஷ்வினாயகம் இசையமைத்திருக்கிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். வாலியும், நா.முத்துக்குமாரும் பாடல்களை எழுதியிருக்கிறார். மோமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
2. பப்பாளி
அரசூர் மூவிஸ் சார்பாக அம்பேத்குமார், ரஞ்ஞீவ் மேனன் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது பப்பாளி. இதில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, நிரோஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு விஜய். விஜய் எபிநேசர் இசையமைத்திருக்கிறார். ஏ.கோவிந்தமூர்த்தி எழுதி, இயக்கியிருக்கிறார்.
3. சூரன்
அரோவணா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கரண், அனுமோல், ஷீபாலி, சதீஷ், ஜெகன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு: செல்வராஜ். பாடல்கள்: யுகபாரதி, பாலு நாராயணன். எடிட்டிங்: சலீம். PB பாலாஜி இசையமைத்து இருக்கிறார்.
4. நளனும் நந்தினியும்
லிப்ரா புரொடெக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கும் இப்படத்தில் மைக்கேல், நந்திதா, சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், சாம்ஸ், ரேணுகா, மதுரை ஜானகி, மதுமிதா, ரவி ராகுல் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – நிஸார். இசை – அஸ்வத், பாடல்கள் – கங்கை அமரன், மதன் கார்க்கி, நிரஞ்சன்பாரதி. நடனம் – சதீஷ், ஸ்டன்ட் – எஸ்.தியாகராஜன், எடிட்டிங் – ஆலன், கலை – கோபி ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.வெங்கடேசன்.
5. டான் ஆஃப் தி ஏப்ஸ் – ஆங்கில டப்பிங் படம்