இன்று நவம்பர் 28, 2014 அன்று 6 நேரடி தமிழ்ப் படங்களும் 1 தெலுங்கு டப்பிங் படமும் வெளியாகியிருக்கின்றன.
1. காவியத் தலைவன்
ரேடியன் மூவிஸின் சார்பில் வருண் மணியனும், ஒய்நாட் ஸ்டூடியோவின் சஷிகாந்தும் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது. தமிழகத்தில் 1940-க்கு முன்பு வாழ்ந்த நாடக நடிகர்களின் கதை. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா ஆகியோர் நடித்துள்ளனர். இசை – ஏ.ஆர்.ரகுமான். வசனத்தை ஜெயமோகன் எழுத, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வசந்தபாலன்.
2. வேல்முருகன் போர்வெல்ஸ்
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தயாரித்த முதல் சொந்தப் படம். நிதி பிரச்னையால் கடந்த ஓராண்டாக வெளியாக முடியாமல் தவித்த படம், இப்போதுதான் வெளிவருகிறது. இந்தப் படத்தில் அங்காடி தெரு மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு, ரகசியா நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை. எம்.பி.கோபி எழுதி, இயக்கியுள்ளார்.
3. மொசக்குட்டி
மெகா ஹிட் படமான ‘மைனா’ மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் அடுத்த படம்தான் இந்த ‘மொசக்குட்டி.’
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடித்திருக்கிறார். மற்றும் பசுபதி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், ‘யார்’ கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்து ரவி, பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மைனா சுகுமார், இசை – ரமேஷ் விநாயகம், எடிட்டிங் – ஆண்டனி, நடனம் – நோபல், கலை – எம். பிரபாகர், ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு – ஜான்மேக்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.ஜீவன்.
4. விஞ்ஞானி
நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றிய பார்த்தி என்பவர் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கும் படம் விஞ்ஞானி. இதில் மீரா ஜாஸ்மின் நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மாரிஸ் விஜய் இசையமைத்திருக்கிறார்.
5. ஆ
5 பேய் கதைகளை கொண்டு ஒரு தொகுப்பு படமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘ஆ’ படம். இதனை ‘ஓர் இரவு’ மற்றும் ‘அம்புலி’ படத்தினை இயக்கிய இயக்குநர்கள்தான் எழுதி, இயக்கியிருக்கிறார்கள்.
‘அம்புலி புகழ்’ கோகுல்நாத், சிம்ஹா, பால சரவணன் ஆகிய மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு சதிஷ்.ஜி, இசை கே.வெங்கட்பிரபு சங்கர், பின்னனி இசைக்கோர்ப்பு சாம்.சி.எஸ், படத்தொகுப்பு ஹரிஷ் சங்கர். கே.டி.வீ.ஆர் க்ரியேடிவ் ப்ரேம்ஸ் தயாரிப்பில் வி.லோகநாதன், வி.ஜனநாதன் மற்றும் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
6. புளிப்பு இனிப்பு
‘மடிசார் மாமி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ‘புளிப்பு இனிப்பு’ என்று பெயர் மாற்றி வெளியாகிறது.
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் என்ற பட நிறுவங்கள் இணைந்து இந்த புளிப்பு இனிப்பு படத்தைத் தயாரித்துள்ளார்கள்.
மிதுன், ரிஷி பூட்டாணி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மான்சி, காயத்ரி நடித்திருக்கின்றனர். அஞ்சலி என்கிற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் நான்கு சிறுமிகளும் நடித்துள்ளனர்.
ரவிபிரகாஷின் கதைக்கு ரஞ்சித் போஸ் திரைக்கதை எழுதி உள்ளார். ரவிபிரகாஷ், ரஞ்சித் போஸ் இருவரும் இணைந்து வசனம் எழுதி உள்ளனர். அதே போல ரஞ்சித் போஸ் படத்தை இயக்கியதோடு அல்லாமல் படத்தொகுப்பையும் செய்துள்ளார். எல்.வி.கணேசன் இசையமைக்க, பாடல்களை பழனிபாரதி, யுகபாரதி, முத்துவிஜயன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
7. என் பெயர் பவித்ரா – தெலுங்கு டப்பிங் படம்
ஷ்ரேயா நடித்திருக்கும் தெலுங்கு படம். ஜி.மகேஸ்வரரெட்டி தயாரித்திருக்கிறார். வித்யாசாகர் இயக்கியிருக்கிறார்.