இன்றைய ரிலீஸ் படங்கள் :
மே தின விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை என்று இன்றைக்கு 4 திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.
அடுத்த வெள்ளியன்று ரஜினியின் ‘கோச்சடையான்’ வெளியாவதால் அடுத்த 3 வாரங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் ஒரு வாரம் ஓடுவது உறுதி என்கிற உறுதிமொழியோடு இந்தப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. நீ எங்கே என் அன்பே
ஹிந்தியில் ‘கஹானி’ என்ற பெயரில் வித்யாபாலனின் நடிப்பில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் இது. ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. வித்யாபாலனின் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். நாட்டில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சென்னையில் குண்டு வெடித்திருக்கும் ஒரு பொருத்தமான நாளில் தமிழிலும் அறிமுகமாகிறது. சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். வைபவ் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் பசுபதிக்கு வெயிட்டான கேரக்டர்.. படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை, அருமையான இயக்கத்தில் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.
2. தாவணிக் காற்று
ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்களே அதிகம் நடித்திருக்கின்றனர். இசை : உதயன், ஒளிப்பதிவு : முத்ரா, எடிட்டிங் : உதயங்கர்.. எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.பி.மனோகர்.
3. ஆதி தப்பு
கருணா பிலிம்ஸ் சார்பில் எம்.சி.சுப்ரமணி தயாரித்திருக்கிறார். நாயகனாக சந்தோஷ்குமார். நாயகியாக யுவலரசினி ராய் நடிக்கின்றனர். மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பாடல்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் சி.கே.கருணாநிதி. கிராமங்களில் தப்பு அடிக்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் வாழ்க்கையைப் பற்றிய படம்..
4. தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – பாகம்-2 படத்தின் தமிழ் பதிப்பும் இன்று ரிலீஸாகியுள்ளது.