தாரை தப்பட்டை – பாலாவின் புதிய படத்தின் டைட்டில்..!

தாரை தப்பட்டை – பாலாவின் புதிய படத்தின் டைட்டில்..!

இயக்குநர் பாலா இயக்கும் அடுத்த படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார்கள்.. இன்றைக்கு்ததான் அதனை வெளியிட்டிருக்கிறார்கள்.

“தாரை தப்பட்டை” – இதுதான் தலைப்பு.. கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் இந்தத் தலைப்பைப் பார்த்தால், தாரை- தப்பட்டைக்கும் கரகாட்டத்திற்கும் நடுவில் ஏற்படும் காதல்தான் படத்தின் கதை என்பது போல் தோன்றுகிறது..

எது எப்படியிருந்தாலும் இந்தப் படம் இசைஞானியின் 1000-மாவது படம் என்கிற சிறப்புடன், சசிகுமார் பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் என்பதாலும் பாலாவின் எந்தப் படத்தையும்விட இதற்கு அதிக எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

விஷாலின் பலமான சிபாரிசில் வரலட்சுமி இதில் ஹீரோயினாக ஐக்கியமாகியிருக்கிறார். ஸோ.. விஷாலின் கல்யாணம் இந்த வருடம் கிடையாது என்பதும் உறுதியாகிவிட்டது.

தாரை தப்பட்டைகள் கிழிய… கரகாட்டம் ஆடிக் களைக்க.. வரலட்சுமியும், சசிகுமாரும் திரையில் என்னவாக போகிறார்கள் என்பதை நினைத்தால் இப்போதே நமக்கு குபீர் என்கிறது..!

Our Score