full screen background image

ரவி தேஜாவின் பான் இந்திய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !

ரவி தேஜாவின் பான் இந்திய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ்.

இந்தப் படத்தில் ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

எழுத்து – இயக்கம் : வம்சி, தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால், தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா, இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : R.மதி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா, பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்.

ஏற்கெனவே இந்த டைகர் நாகேஸ்வர  ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை சொல்லும் படமான இந்தப் படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மோசமான கொள்ளைச் சம்பவங்களைச் செய்த ஸ்டூவர்ட்புரம் கொள்ளையன் டைகர் நாகேஸ்வர ராவ் சென்னை மத்திய சிறையில் இருந்து தலைமறைவானது தொடர்பான செய்தி அறிக்கையுடன் இந்த டீஸர் வீடியோ தொடங்குகிறது.

இதுவரை இது போன்ற சம்பவம் நடந்ததில்லை என்பதால் போலீசார் அதிர்ச்சியடைகின்றனர்.  புலி மண்டலத்தில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி முரளி சர்மா, டைகர் நாகேஸ்வர ராவின் அரிய திறமைகளை பற்றி டீஸரில் விவரிக்கிறார்.

“நாகேஸ்வரராவ் அரசியலுக்கு வந்திருந்தால், அவர் தனது புத்திசாலித்தனத்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார். அவர் விளையாட்டில் நுழைந்திருந்தால், தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றிருப்பார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால், தன் வீரத்தால் போரில் வெற்றி பெற்றிருப்பார். துரதிர்ஷ்டவசமாக, அவர் குற்றவாளியாகி விட்டார்” என்று டி.என்.ஆரி.-ன் திறமைகளை விவரிக்கிறார் முரளி சர்மா.

டைகர் நாகேஸ்வர ராவ் சிறு வயதிலேயே குற்றங்களைச் செய்யத் தொடங்கியதால், சிறு வயதில் இருந்தே கடுமையான  இயல்பு கொண்டவராக இருக்கிறார். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அவர் ஏற்படுத்திய அச்சத்தால், அவரைப் பிடிக்க காவல் துறையும் இராணுவப் படையும் களமிறங்குகின்றன.

இந்த டீஸரில் கடைசிவரை அவரது முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், அவரது இருப்பு டீஸர் முழுவதும் தெரிகிறது. பின்னர், அவரது நுழைவு கதையை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. டீஸரில் வரும் ரயில் எபிசோட் அவரது கதாபாத்திரத்தின் தைரியத்தைக் காட்டுகிறது.

ரவி தேஜாவை இந்தப்படத்தின் டீஸரில் பார்த்த பிறகு, இந்த டைட்டில் ரோலில் வேறு எந்த நட்சத்திரத்தையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கதாப்பாத்திரமாக அவரது உருமாற்றத்தில் இருந்து கதாபாத்திரத்தை சித்தரித்ததுவரை, ரவி தேஜா  டீஸரில் அசத்தியிருக்கிறார். அவர் தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார்.

தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களை தொடர்ந்து பான் இந்தியா பிளாக் பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் வம்சியின் சிறப்பான எழுத்து மற்றும் சிறந்த இயக்கம் படத்தை மெருகூட்டுகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். R.மதி  தனது கேமரா மூலம் கதைக்கு பிரமாண்டத்தை கொண்டு வருகிறார், இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அபாரமான ஸ்கோரின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் தந்துள்ளார். புரடக்‌ஷன் டிசைனர் அவினாஷ் கொல்லா சிறப்புக்குரியவர்.

மொத்தத்தில், புலியின் படையெடுப்பை காட்டும் டீஸர், படத்திற்கு வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20-ம் தேதி தசரா பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

Our Score