தமிழ் சினிமாவுக்கு புதிய ஹீரோயின் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். பெயர் ‘துவாரா’. ‘சைவம்’ படத்தில் இயக்குநர் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
‘துவாரா’ என்ற பெயர் விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற பெயராகும். ‘maaza’, ‘கிளினிக் பிளஸ்’ உள்ளிட்ட பிரபலமான விளம்பரங்களில் நடித்த ‘துவாரா’, பிராந்திய மொழிகளுக்கான விளம்பரத்தில் இயக்குனர் விஜய் மூலமே அறிமுகமானவர்.
பிறகு விஜய்யின் இணை இயக்கத்தில் உருவான ‘காஞ்சிவரம்’ என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்போது விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்தில் மூத்த நடிகர் நாசரின் மகன் பாஷாவின் ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
“துவாரா’ ஒரு உற்சாகத்தின் குவியல், திறமைகளின் சங்கமம். அவர் எனக்கு இளம் வயது ஸ்ரீதேவியை நினைவுபடுத்துகிறார். சினிமாவை பற்றிய அவரது ஞானம், காமெரா கோணங்கள் பற்றிய அவரது தொழில் நுட்ப அறிவு, பின்னணியில் இருந்து அவருக்கு தமிழ் வசனங்கள் கற்று கொடுக்க அவசியம் இல்லாத அவரது புத்தி கூர்மை, ஆகியவை அவரது திறமைக்கு மொழி ஒரு கட்டுப்பாடு இல்லை என்பதை நிரூபிக்கிறது. என் கணிப்பின்படி துவாராவுக்கு திரை உலகில் பெரிய எதிர்காலம் உண்டு…” என்கிறார் இயக்குநர் விஜய்.
படம் வரட்டும். அதையும் பார்த்திருவோம்..!