full screen background image

துப்பார்க்கு துப்பாய – விடாமல் துரத்தும் பேயின் கதையாம்..!

துப்பார்க்கு துப்பாய – விடாமல் துரத்தும் பேயின் கதையாம்..!

‘விடிவெள்ளி வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், ஜானகி தருமராசன் தயாரித்துள்ள திரைப்படம் ‘துப்பார்க்கு துப்பாய’.

இத்திரைப்படத்தில் மலேசியாவின் பிரபல நடிகரான ‘விகடகவி’ மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஜோடி நம்பர் ஒன்’ புகழ் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் அதிரடியாக நடித்திருந்த ஆனந்தியும் ஒரு முக்கிய வேடத்தில் நடத்துள்ளார்.

மைதிலி மகேந்திரன் மற்றும் கலைச்செல்வி சோலைராஜாவின் இணை தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் அபரஜித், ஜெய்கணேஷ், மகாதாரா, தயாளன், ராகவன், கிஷோர், பிரியா, நகினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திரைப்படத்திற்கு வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார் சோலைராஜா. அருண் பிரசாத் படத் தொகுப்பை கவனிக்க, அட்டகாசமான ‘க்ராபிக்ஸ்’ காட்சிகளும்  இந்த ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ராஜ ராஜராஜனின் துள்ளலான வரிகளுக்கு டி.கே.இமானுவெல் துடிப்பாக இசை அமைத்துள்ளார். மலேசியா மற்றும் சிங்கப்பூர் ரசிகர்களை கவரும் வகையில், ‘விகடகவி’ மகேந்திரன் அதிரடியான ‘ராப்’ பாடல் ஒன்றையும் பாடி உள்ளார். ராஜு நடனம் அமைக்க, ‘சிலம்பம்’ சையது சண்டைக் காட்சிகளை உருவாக்கி உள்ளார்.

சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘துப்பார்க்கு துப்பாய’ படம், நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக உருவாகியுள்ளது.

கதாநாயகனையும், அவனது நண்பர்களையும் பேய் ஒன்று விடாமல் விரட்டிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும் பின்னாலேயே செல்லும் பேய், கதாநாயகன் குழுவினருடன் கண்ணா மூச்சு ஆட்டம் போடுகிறது. எதற்காக பேய் அவர்களை விரட்டுகிறது..? கதாநாயகன் பேயிடம் இருந்து தப்பினாரா..? என்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் கதை, திரைக்கதையை பரபரப்பாக அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ ராஜராஜன்.

உதகை, கொடைக்கானல், வேலூர், பெங்களூர் மற்றும் ஆந்திர வனப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score