கார்த்தி-நாகார்ஜூனா நடிக்கும் ‘தோழா’ மார்ச் மாத இறுதியில் வெளியாகிறது..!

கார்த்தி-நாகார்ஜூனா நடிக்கும் ‘தோழா’ மார்ச் மாத இறுதியில் வெளியாகிறது..!

பி.வி.பி. சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி – நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  

இணை பிரியாத  நடிப்பை  அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘தோழா’ உலகெங்கும் உள்ள அருமையான கண்கவர் இயற்கை கொஞ்சும் தளங்களில்  படமாக்கப்பட்டு உள்ளது.

இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், விவேக், மறைந்த நடிகை கல்பனா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை – கோபி சுந்தர். பி எஸ் வினோத் ஒளிப்பதிவில், வம்ஷி இயக்கும் இந்த ‘தோழா’ திரைப்படம் வரும் மார்ச் மாத இறுதியில் வெளிவர  உள்ளது.

Our Score