‘தோழா’ படத்தின் டீஸர் பிப்ரவரி 20-ல் ரிலீஸ்..!

‘தோழா’ படத்தின் டீஸர் பிப்ரவரி 20-ல் ரிலீஸ்..!

ஒரு நடிகராக கார்த்தி தான் ஏற்று நடிக்கும் வேடங்களில் எல்லாமே, அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே  மாறி விடும் திறமை  உள்ளவர் என்பதை அனைவருமே அறிவர்.

‘பருத்தி வீரன்’, ‘நான் மகன் அல்ல’  ஆகிய படங்களில் இது  மிக தெளிவாக தெரிந்தது. அடுத்து அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தோழா’ படத்தில்கூட மேற்கூறிய முந்தைய படங்களை போலவே  அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படும் எனக்  கூறப்படுகிறது. 

ஒரு மாற்று திறனாளிக்கும், மன ரீதியாக பெரும் போராட்டத்தில் இருக்கும் ஒருவனுக்கும்  இடையே நடக்கும் போராட்டமே இந்த ‘தோழா’ திரைப்படத்தின் கதை. மிகுந்த எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ள இந்த ‘தோழா’  திரைப்படம், திரையுலகினரை போலவே  ரசிகர்களையும் ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கிறது.

‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் கார்த்திக்கு இணையாக நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயரெடுத்த நடிகை தமன்னா, இந்த ‘தோழா’ படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாகார்ஜுனா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரகாஷ் ராஜ், விவேக், ஜெயசுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபி சுந்தர் இசை அமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், பி.வம்சி இயக்கியிருக்கிறார்.

பி.வி.பி. சினிமாஸ் தயாரித்திருக்கும் இந்த ‘தோழா’ திரைப்படத்தின் டீசர்,  இந்த மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

Our Score