‘தொப்பி’ என்பது தமிழகத்தில் பல இடங்களில் காவலர்களை குறிப்பிடும் சொல். காவலர்களின் பலத்தையும் செல்வாக்கையும் பற்றி பெரிய அளவும் மதிக்கும் இளைஞர்கள், ‘தொப்பி’ என்ற சொல்லில் அழைக்கப்படுவதை பெருமிதமாக நினைப்பதும் உண்டு.
‘மதுரை சம்பவம்’, வெளி வர இருக்கும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகாதான் இந்தத் ‘தொப்பி’ படத்தையும் இயக்கியுள்ளார்.
குரங்கணி காட்டின் பசுமையான பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள ‘தொப்பி’, காவலனாக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள ஒரு இளைஞனை பற்றிய கதை.
குற்றப் பின்னணியை களமாகவும், கலாச்சாரமாகவும் கொண்ட அந்த இளைஞனுக்கு அவனது லட்சியக் கனவை அடைய அதே குற்றப் பின்னணி தடையாக இருக்கிறது என்பதுதான் ‘தொப்பி’யின் மூலக் கதைக் கரு.
வைரமுத்துவின் பாடல்கள், மற்றும் ‘மைனா’ புகழ் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறதாம். ராயல் ஸ்கிரீன்ஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ். பரமராஜ் தயாரித்துள்ள இந்த்த் ‘தொப்பி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ‘தொப்பி’ அடுத்த மாதம் நிச்சயம் வெளிவரும் என்கிறார் தயாரிப்பாளர்.
Technicians list
PRODUCER S.PARAMA RAJ
DIRECTOR YOUREKA
CAMERAMAN M. SUKUMAR
MUSIC RAMPRASAD SUNDAR
ART DIRECTOR MOHANA MAHENDRAN
EDITOR R. NIRMAL
CHOREOGRAPHER SHIVAJI
FIGHT MASTER SUPREME SUNDAR
LYRICS VAIRAMUTHU