வசுந்தராதேவி சினி கம்பைன்ஸ் மற்றும் நாடோடிகள் நிறுவனம் இணைந்து வழங்கவிருக்கும் புதிய படம் ‘தொண்டன்’.
‘அச்சம் என்பது மடமையடா’, ‘கிடாரி’ ஆகிய படங்களை வசுந்தரா தேவி சினி கம்பைன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் வெளியிட்டவர் ஆர்.மணிகண்டன். இவர் இப்போது முதல்முறையாக திரைப்பட தயாரிப்பிலும் கால் பதிக்கிறார்.
இவருடைய முதல் படைப்பை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கவுள்ளார். படத்தின் பெயர் ‘தொண்டன்’.
இந்தப் படத்தில் விக்ராந்த், தம்பி ராமையா, சூரி, கஞ்சா கருப்பு, நமோ நாராயணன், ‘பிச்சைக்காரன்’ புகழ் மூர்த்தி ஆகியோருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியே நடிக்கவுள்ளார். ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், பாடல்கள் – யுகபாரதி, விவேக், கலை – ஜாக்கி, படத்தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், சண்டை பயிற்சி – விஜய், நடனம் – ஜானி, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.சிவச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு வடிவமைப்பு – மதுரை என்.மோகன்-விவேக். தயாரிப்பு – ஆர்.மணிகண்டன், எழுத்து, இயக்கம் – பி.சமுத்திரக்கனி.
இம்மாதம் 16-ம் தேதி நெய்வேலியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.