Two Movie Buff’s நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.
இந்தப் படத்தில் பார்த்திபன், கயல் சந்திரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக சாத்னா டைட்டஸ் நடித்துள்ளார். கூடவே டேனியலும், சாம்ஸும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வத், படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ரமணன், கலை இயக்கம் – ரெமியன், பாடல்கள் – நிரஞ்சன் பாரதி, கே.என்.முரளிதரன், சுதர், நடன இயக்கம் – கல்யாண், ஆண்டோ, சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், உடை வடிவமைப்பு – The Dress Shop, ஒப்பனை – ராஜா, ஒலி அமைப்பு – Sync Cinema, தயாரிப்பு இயக்கம் – அண்ணாமலை, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி ஒன், டிசைன்ஸ் – தண்டோரா, நிர்வாகத் தயாரிப்பு – கே.பி.ராம், இணை தயாரிப்பு – ஆர்.சந்திரசேகர், ஜெ.நரேந்திரன், தயாரிப்பு – பி.எஸ்.ரகுநாதன், பிரபு வெங்கடாச்சலம், எழுத்து, இயக்கம் – சுதர்.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.
இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், நடிகர் கயல் சந்திரமெளலி, நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர், படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன், இயக்குநர் சுதர் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் கயல் சந்திரன் பேசுகையில், “கயல்’ படத்திற்குப் பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’தான்.
அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடிதான் காட்டணும். எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்துதான் ஆக வேண்டும். எதை காண்பிக்க வேண்டுமோ, அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். இதைத்தான் இந்தப் படத்தில் நாங்கள் செய்திருக்கிறோம்.
தற்போது தமிழ்த் திரையுலகத்தில் பல இன்னல்களைத் தாண்டித்தான், தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்தப் படமும் மூன்று வருட தயாரிப்புக்குப் பிறகு மிகுந்த சிரமத்திற்கிடையில் திரைக்கு வரவிருக்கிறது.
திட்டம் போட்டு ஒரு கும்பல் கிரிக்கெட்டுக்கான உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடுகிறோம்…” என்றார்.