ஸ்ரீசெந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C. வெங்கிடபதி, S. பாலசுப்ரமணியம், K.A. சசி பிரகாஷ் ஆகியோர் இணைந்த தயாரிக்கும் புதிய படம் ‘திருட்டுக் கல்யாணம்.’
இதில் கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் A.வெங்கடேஷ் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து (இவர் ரத்னவேலுவின் உதவியாளர்)
இசை – வைத்தி
கலை – A. பழனிவேல் (இவர் வைரபாலனின் உதவியாளர்)
எடிட்டிங் – சஷிகுமார் (இவர் டான்மேக்ஸ் உதவியாளர்)
பாடல்கள் – சேலம் சிவா, ஷக்திவேலன்
ஸ்டன்ட் – ரவி ஸ்ரீசந்திரன்
நடனம் – நோபல், சங்கர், ராதிகா, நந்தா
தயாரிப்பு நிர்வாகம் – ஜெய்ராம்
தயாரிப்பு – ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – ஷக்திவேலன். (இவர் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும் ஹீரோவு்ம், ஹீரோயினும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடி போய் திருட்டு கல்யாணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் நிறைவேறியதா..? அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்தார்களா என்பதுதான் கதை..!
பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் இடைவெளிதான் இது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் மிகப் பெரிய பிரச்சினைக்குக் காரணம். அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்.
மேலும், இந்த படத்தில் ‘ஆச மேல ஆச’ என்ற பாடலை சிலம்பரசன் பாடி இருக்கிறார். இந்தப் பாடலும் நடிகை ஆண்ட்ரியா பாடியிருக்கும் ‘சொர்க்கத்த’ என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட் ஆகுமென்று எதிர்பார்க்கிறோம்.
சன் டி.வி சூப்பர் சிங்கர் புகழ் ஆட்டம்பாம் ஐஸ்வர்யா பாடிய ‘சின்ன சின்ன’ என்ற பாடலும் நிச்சயம் பெயர் வாங்கும். பத்து வயதான இந்தச் சின்னப் பெண் இவ்வளவு தெளிவாக பாடியதை பார்த்து அதிசயித்து விட்டோம்…” என்றார்.