மிக வித்தியாசமான கதை, வித்தியாசமான கதை களம் என்ற வகையில் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் ‘திருமணம் எனும் நிக்கா’ திரைப்படம், மே மாதம் வெளிவரும் என தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
‘காதலர்களுக்குள் புரிதல் அவசியம்’ என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் இந்தப் படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பை பற்றி கூறும் படமாகும்.
இயக்குனர் அனீஸ், ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தை பற்றி பேசும்போது, “இந்தப் படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்ப்ரதாயங்களையும், கலாசாரத்தையும் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நஸ்ரியாவின் நடிப்பும் சரி… தோற்றப் பொலிவும் சரி… அவருக்கு என் இப்படி ஒரு புகழ் என்பதற்கு விடை கொடுக்கும். ஜெய், எங்கேயும் எப்போதும் எல்லோரையும் கவரும் வண்ணம் நடித்து உள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதளவு உதவும். திருமணம் எனும் நிக்கா குடும்பத்தோடு பார்த்து மகிழும்.. ஒரு மெல்லிய காதல் இழை ஓடும்… மெய் மறக்கச் செய்யும் இசை கலந்த ‘Feel good ‘ movie..” என்கிறார்.