உதயம் ஸ்கிரீன்ஸ் – பாசத்தாய் மூவீஸ் வழங்கும் “திரைப்பட நகரம்”
செந்தில், முத்து, ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய 6 நண்பர்களும் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, நண்பர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வாடகைகூட வாங்காமல் அவ்வப்பொழுது அவர்களுக்கு உணவும் தந்து உதவுகிறார்.
புரொடக்ஷன் மேனேஜர் தம்பி ராமையாவும் அவர்களுக்கு பல இடங்களில் சிபாரிசு செய்கிறார். அவரின் சிபாரிசின் பேரில் நண்பர்களுக்கு ஒரு பட வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களும் நல்லபடியாக அந்த படத்தை உருவாக்குகிறார்கள். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இசையமைப்பாளராக வரும் ஆசிம் தொலைக்காட்சி பேட்டியில் தன்னைப் பற்றி உயர்வாக சொல்ல, இயக்குனராக வரும் செந்திலுக்கு அது பிடிக்காமல் போகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு நண்பர்கள் மூன்று, மூன்று பேராக பிரிந்து விடுகிறார்கள். படம் பாதியிலேயே நின்று விடுமோ என்ற பயத்தில் தம்பி ராமையா அவர்களை அழைத்து சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கிறார்.
இதுதான் படத்தின் கதை.
நடிகர், நடிகையர் :
முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி, பிரியா, தேவதர்ஷினி, எலிசபெத், தம்பி ராமையா, எஸ்.என்.சுரேந்தர், ‘காதல்’ தண்டபாணி, கானா பாலா, ஆர்.சுந்தர்ராஜன்.
இசை – நித்யன் கார்த்திக்
ஒளிப்பதிவு – கே. நித்யா
படத்தொகுப்பு – எம்.ஆர். சீனிவாசன்
இயக்கம் – எஸ்.பி. ஞானமொழி
தயாரிப்பு – எஸ்.பி.ஞானமொழி முருகன், வாத்தியார் எஸ். சுப்பிரமணியம், ஈரோடு தா.மன்சூர்