நல்ல தமிழில் பெயர் வைத்தாலே சினிமா ரசிகர்களுக்கு புரிவதில்லை. இதில் இலக்கணத் தமிழில் பெயர் வைத்து , அதற்கான காரணத்தை படம் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வதெல்லாம், என்ன மாதிரியான படைப்புத் திறன் என்று தெரியவில்லை..!
‘தெகிடி’ படத்தின் இசை வெளியீடு மற்றும் பிரஸ் மீட் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. பிரஸ் மீடடில் பேசிய இயக்குநர் ரமேஷிடம் இந்தத் தலைப்பு பற்றியே பல கேள்விகள் சராமரியாக எழுப்பப்பட்டன..
“தெகிடி’ என்றால் ‘சூதாட்டம்’, ‘பகடை’, ‘தாயம்’ன்ற மாதிரியான வார்த்தை..” என்றார் இயக்குநர். “இதுக்கு சூதாட்டம், பகடை, தாயம்ன்னே பெயர் வைச்சிருக்கலாமே?” என்று கேட்டதற்கு “அதைவிட இது சிறப்பாக இருக்கும்னு எங்களுக்குத் தோணுச்சு. அதான் வைச்சோம்” என்றார் இயக்குநர்..
படத்தின் டிரெயிலரில் கிடைத்த கதைப்படி ஹீரோ அமைதியாக ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவரது வாழ்க்கையில் அவரைச் சுற்றியே பல மர்மச் சம்பவங்கள் ரவுண்ட்டப்பாக நடக்கிறது. அதனைத் தேடி அவர் அலையத் துவங்க.. கிடைக்கின்ற சுவாரஸ்யம்தான் கதைன்னு தெரியுது. இதுக்கு தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் உலாவுகிறாராம்.. இதுவரையில்தான் புரிந்து கொள்ள முடிந்தது..!
இந்தக் கதைக்கு ‘சூதாட்டம்’, ‘தாயம்’, ‘பகடை’ என்ற பெயர்களே மிகப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.. இதைவிடவும் இந்தத் ‘தெகிடி’ என்ற பெயர் எப்படித்தான் பொருத்தமென்று தெரியவில்லை..!
படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் சி.வி.குமார், நண்பர்களுடன் இணைந்து தயாரித்து திரைக்குக் கொண்டு வரவிருப்பதால் நிச்சயம் படம் பேசப்படும்.. ஜெயிக்கும்னு இயக்குநர் நம்புகிறார்..