‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜி.எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ள இந்த படம், இயக்குநராக அறிமுகமாகும் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அதிரடி, திரில்லர் அம்சங்களுடன் கூடிய இப்படம் சட்டம், நியாயம், தர்மம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூகப் பின்னணியிலான கதையாக உருவாகியுள்ளது.
“சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும்; நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும்; ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும்” — என்ற வலுவான கருத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இப்படத்தில் பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு
இசை – பரத் ஆசிவகன்
எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.
‘தீயவர் குலை நடுங்க’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.









