இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும், ‘டமால் டுமீல்’ படத்தின் இயக்குநருமான ஸ்ரீ, தனது நண்பர் எஸ்.ஆர்.ஜெ., உடன் இணைந்து ஜெயந்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீதும் சூதும்!’
இந்தப் படத்தில் கதையின் நாயகன் சிவாவாக ஸ்ரீ, நாயகி ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா, அப்பா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அவினாஷ், உமர் கதாபாத்திரத்தில் ஸ்ரீனிவாசன், கிருபா, பேபி தாக்ஷிகா, கிரி, கவிதா ராதேஷ்யாம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பு – ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜெ.,
இணை தயாரிப்பு – ஜெயந்தி, மணிகண்டன், பாலாஜி,
இயக்கம் – ஜித்தா மோகன்,
ஒளிப்பதிவு – பராந்தகன்.இ,
இசை – பிரணவ் கிரிதரன்,
படத் தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன்,
சண்டை பயிற்சி – ஜி,
நடனம் – லலிதா ஷோபி,
கலை – எஸ்.எஸ்.சுசீ தேவராஜ்,
பாடல்கள் – ஜெ.மனோஜ் பிரபாகர், திரைக்கதை, வசனம் – ஸ்ரீ,
பத்திரிக்கை தொடர்பு – சி.என்.குமார்.
படம் பற்றி இயக்குநர் ஜித்தா மோகன் பேசும்போது, “நாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாயகியின் தந்தை லாரன்ஸின் சதி திட்டத்தால் இவர்களின் காதல் பிரிகிறது.
சிவா காதலியை அடைய கிரிமினல் உமரோடு கை கோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவை பயன்படுத்தி வேறு திட்டம் போடுவதால் ஜெஸ்ஸி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்த மூன்று பேரும் அறியாத இன்னொரு நபரின் திட்டத்தில் சிக்கிய இவர்கள் தப்பித்தார்களா? பின்னர் நடந்தது என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
நாம் தேர்வு செய்யும் காதல் நம் எதிர்காலத்தை எப்படி முடிவு செய்யும் என்பது கதையின் கரு…” என்றார்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.









