AAA CINEMA பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தி ரோடு’(The Road).
இந்தப் புதிய படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸ் சபீர், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – அருண் வசீகரன், ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – நாகூரான், கலை இயக்கம் – சிவ யாதவ், சண்டைப் பயிற்சி இயக்கம் – பீனீக்ஸ் பிரபு, நிர்வாகத் தயாரிப்பு – ஜெயில் சம்பத், நேரடி தயாரிப்பு – கணேஷ் கோபிநாத், வள்ளிகந்தன், புகைப்படங்கள் – அமீர், பத்திரிகை தொடர்பு – டைமண்ட் பாபு, உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – எஸ்.ரவி, விளம்பர வடிவமைப்பு – சபீர்.
இந்தப் படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் அருண் வசீகரன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். குறும் படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
2000-ம் ஆண்டுகளில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகிறது.
இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இந்த இரத்தப் பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே இந்தப் படத்தின் மையக் கரு.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் கதை என்பதால் அந்தச் சம்பவம் நடைபெற்ற இடங்களிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது.
வரும் ஏப்ரல் 25-ம் தேதி முதல் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக 50 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.