full screen background image

நடிகர் அபி சரவணன் தயாரித்து நடிக்கும் ‘தராதிபன்’ திரைப்படம்..!

நடிகர் அபி சரவணன் தயாரித்து நடிக்கும் ‘தராதிபன்’ திரைப்படம்..!

ஆர்.எஸ்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் அபி சரவணன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தராதிபன்.’

இந்தப் படத்தில் அபி சரவணனே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

யாமா’ படத்தில் பணியாற்றிய பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

ஒளிப்பதிவு – எஸ்.சக்திவேல், இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – ஆனந்த், ஜெரால்டின், கலை இயக்கம் – சி.எஸ்.செய்மதி, பாடல்கள் – பிரியசுதன், மதுரா, நடன இயக்கம் – ஐ.ராதிகா, தாஷா, சண்டை இயக்கம் – ராக்கி ராஜேஷ், புகைப்படங்கள் – சீனு, ஒப்பனை – ராவ், மக்கள் தொடர்பாளர் – பிரியா, ஒலி வடிவமைப்பு – எ.எம்.ரஹ்மதுல்லா, DI – ஷேட்  69 ஸ்டுடியோஸ், Sfx – சவுண்ட் ஹோலிக் சினிமா, Vfx..design – என். டாக்கீஸ், மீடியா பார்ட்னர்- லைட்சன்  மீடியா,  இணை தயாரிப்பு – சங்கர், தயாரிப்பாளர் –அபி சரவணன், எழுத்து, இயக்கம் – சையத்.

டெல்லியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படம் ஒரு காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது,

இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல விநியோகஸ்தரான சக்தி பிலிம் பேக்டரியின் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

 
Our Score