full screen background image

“தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்…” – ‘தப்பு தண்டா’ படம் சொல்லும் கதை..!

“தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்…” – ‘தப்பு தண்டா’ படம் சொல்லும் கதை..!

‘தேர்தலில் ஓட்டுக்கு  பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்க முடியாத குற்றம்” என்று ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் சொன்னது மக்கள் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை  மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘தப்பு தண்டா.’

இந்தப் படத்தில் சத்யா, ஸ்வேதா கய் மற்றும் உதயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் பிரமாதமாக நடித்துள்ளனர். ‘மைம்’ கோபி, அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பல பிரபல இயக்குநர்களுக்கு ஆசானாக கருதப்படும் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின்  சினிமா பட்டறையிலிருந்து பயின்று வெளிவந்த இயக்குநர் ஸ்ரீகண்டன்தான் இந்த ‘தப்பு தண்டா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தேர்தல்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட இந்தப் படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதியன்று வெளியாவது மிகச் சரியான பொருத்தமானது. 

‘மாநகரம்’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த ‘தப்பு தாண்டா’ படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இப்படத்தின் இயக்குநரான ஸ்ரீகண்டன் பேசுகையில், “இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது. ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும், களப்பணியும் தேவைப்பட்டது. அது இல்லாவிட்டால் இவ்வாறான ஒரு  தேர்தல் பிரச்சாரம் கதைக்கு வலு இருக்காது.

தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர்தான் இந்த ‘தப்பு தண்டா’ திரைப்படம்.

இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நாங்கள் இப்படத்தில்  கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

செப்டம்பர் 8-ம் தேதி முதல் சினிமா ரசிகர்கள் ‘தப்பு தாண்டா’ படத்தை திரையரங்கங்களில் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உள்ளேன்…” என்றார்.

Our Score