துள்ளி வருகிறான் தனுஷின் ‘தங்க மகன்’..!

துள்ளி வருகிறான் தனுஷின் ‘தங்க மகன்’..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தங்க மகன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸிற்காக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது. 

இந்தப் படத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஏ.குமரன், இசை – அனிருத் ரவிச்சந்திரன், எடிட்டிங் – எம்.வி.கணேஷ்குமார், இயக்கம் - வேல்ராஜ்

இந்தப் படத்திற்காக அனிருத் இசையில் தான் ஆடப் போகும் டூயட் பாடலுக்கு தானே பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் படத்தின் ஹீரோவான தனுஷ்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சொல்லப்பட்டதுபோல இந்தப் படம் வரும் டிசம்பர் 18, வெள்ளியன்று ரிரீஸாகும் என்று உறுதியுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

தனுஷின் தொடர்ச்சியான படங்கள் ஹிட் ஆவதோடு இல்லாமல் வசூலிலும் சக்கைப் போடு போடுவதால் இந்தப் படத்திற்கும் விநியாகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.