ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ், ஜெயா பிலிம்ஸ், மேஸ்னர் புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள படம் ‘தனயன்’.
ஒளிப்பதிவு – தேவராஜ், இசை – U.K.முரளி, நடனம் – ரமேஷ் ரெட்டி, ரமேஷ் கமல், மக்கள் தொடர்பு – செல்வரகு, எழுத்து, இயக்கம் – எம்.தியாகராஜ்.
இரு வேடங்களில் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, ஆகியோருடன் சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், தினேஷ் மேட்னே மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஒரு மகன் எப்படி வாழ வேண்டும்; எப்படி வாழ கூடாது என்பதுதான் படத்தின் கதைக் கரு. படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்தது. இப்படத்தில் 3 சண்டை காட்சிகள், 4 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது.