full screen background image

போலீஸ் வேடத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம் ‘தணல்’

போலீஸ் வேடத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம் ‘தணல்’

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம்.ஜான் பீட்டர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில், அதர்வா நடித்திருக்கும் புதிய படம் ‘தணல்.’

இந்தப் படத்தில் அதர்வாவுடன் லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர். மேலும் ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரவீந்திர மாதவா, ஒளிப்பதிவு – சக்தி சரவணன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – கலைவாணன், சண்டை இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், கலை இயக்கம் – எஸ்.அய்யப்பன், பாடல்கள் – விவேக், கார்த்திக் நேதா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

‘வலி உன்னை ஹீரோவாக்கும்; அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்தத் ‘தணல்’ படம் உருவாகியுள்ளது.

போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தத் ‘தணல்’ படத்தில், அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘100’, ‘ட்ரிக்கர்’ போன்ற படங்களில் சரியான கதையில் போலீஸ் கதாப்பாத்திர தோற்றத்திற்காக அதர்வா வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

படத்தின் ஆடியோ, டிரெயிலர் வெளியீடு மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score