full screen background image

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத் தொகுப்பு பயிற்சிப் பட்டறை

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத் தொகுப்பு பயிற்சிப் பட்டறை

நண்பர்களே..!

இந்தியாவின் தலைசிறந்த படத் தொகுப்பாளரான B. லெனின் அவர்கள், தமிழ் ஸ்டுடியோவிற்காக மூன்று நாள் படத் தொகுப்பு பயிற்சி நடத்திக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ள லெனின் அவர்கள் படத்தொகுப்பாளர் மட்டுமல்ல, இயக்குநரும்கூட. அவரது இயக்கத்தில் வெளியான ‘நாக்-அவுட்’ குறும்படம் இந்தியாவில் முதன்முறையாக குறும்படங்களுக்கான தேசிய விருதை பெற்றது.

இந்தப் பயிற்சி வெறுமனே படத் தொகுப்பிற்கான பயிற்சி மட்டுமல்ல, மாறாக வாழ்க்கையை படிக்கவும், நல்ல சினிமாவை உருவாக்குவதற்கான தேவையான உப காரணிகளை தெரிந்துக் கொள்வதற்கான ஒரு மன திறப்பாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறவிடக் கூடாத மிக முக்கியமான இந்த பயிற்சியில் அவசியம் கலந்துக் கொள்ளுங்கள்.

நாள்: 25, 26 & 27, March 2016. (வெள்ளி, சனி, ஞாயிறு), வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை)

இடம்: சென்னை, நேரம்: காலை பத்து மணி முதல்

பயிற்சிக் கட்டணம்: 4500/- (மதிய உணவு உட்பட) கலந்து  கொள்ளும் நண்பர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

முழுத் தொகையையும் உடனே செலுத்த இயலாத நண்பர்கள் இரண்டு தவணையில் பணத்தை செலுத்தலாம். அல்லது பின் தேதியிட்ட காசோலையும் கொடுக்கலாம்.

தொடர்புக்கு :  9840698236

Our Score