full screen background image

பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘தமிழனானேன்’.

பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘தமிழனானேன்’.

புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘தமிழனானேன்’.

படத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார். மேலும், சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர். 

விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார் ஹீரோவான சதீஷ் ராமகிருஷ்ணன்,

தமிழர்களின் தவறான மனப்போக்கால்தான் தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை அன்றைய  ஆதித் தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகியிருப்பான்..? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொண்டிருப்பான்.. என்பதைப் பேசும் படம்தான் இந்த ’தமிழனானேன்’.

படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் பேசும்போது, “இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

படம் மூன்றுவித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும். இன்னொரு அடுக்கு ஒவ்வொரு காட்சியும், ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவறவிட்டாலும் படம் புரியாமல் போய்விடும். மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் யாருக்கும் டூப் போடப்படவில்லை. கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள்தான்.  இப்படம்  இம்மாதம்  23-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது…” என்றார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

Our Score