நடிகர் தம்பி ராமையா இப்போது அனைத்துத் தரப்பு இயக்குநர்களாலும் தேடப்படும் நடிகராக மாறியிருக்கிறார்.
மைனாவில் நடிகராக அறிமுகமாகி இப்போதுவரையிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் இனிமையான பழகும் தன்மை அனைவருக்கும் பிடித்துப் போயிருப்பதால் கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் நடிகராக இருக்கிறார்.
இந்த பிஸியில் இந்த வருடம் ஒரு முக்கியமான படத்தை மிஸ் செய்துவிட்டாராம்.. அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கே.எஸ்.ரவிக்குமார் தம்பி ராமையாவை கேட்டும் அவரால் நடிக்க முடியவி்ல்லையாம்.. காரணம் அவ்வளவு கால்ஷீட் டைட்டாம்..
லிங்கா படத்திற்காக தொடர்ச்சியாக 32 நாட்கள் கேட்ட தேதிகளில் காவியத்தலைவன் படத்தில் நடிக்க ஏற்கெனவே ஒத்துக் கொண்டுவிட்டதால் அதில் நடிக்க முடியவில்லை என்கிறார் தம்பி ராமையா.
ஒரு நடிகர் இப்படி சூப்பர் ஸ்டாரின் படத்திலேயே நடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் என்றால் அது நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்..!