உங்கள் சன் டிவியில், மதிய நேர தொடர்களில் ராடான் மீடியா ஒர்க்ஸ் வழங்கும், மாபெரும் வெற்றி தொடரான ‘இளவரசி’1250 எபிசொடுகளை கடந்து, வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதியுடன், வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து ராடன் மீடியா ஒர்க்ஸ், அதே நேரமான மதிய 1.30 மணிக்கு தினமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ‘தாமரை’ என்கின்ற புதிய மெகா தொடரை ஒளிபரப்ப உள்ளது.
இத்தொடரில் அஸ்வின், நீலிமா ராணி, சாய்லதா T.V.வரதராஜன், L..ராஜா, பபிதா, சாய் பிரசாந்த், M.J.ஸ்ரீராம், ஸ்வப்னா, சாம்பவி, ஸ்ரீதர், ராணி, ஜெய்ராம் இவர்களுடன் நடிகை நிரோஷாவும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் நடிக்கவிருக்கிறார்.
இதுவரை எந்த ஒரு மெகா தொடரிலும் தொடாத ஒரு பிரச்சனையை முன் நிறுத்தும்வகையில், இந்த மெகா தொடரான ‘தாமரையின்’ கதைக்களம் அமைந்துள்ளது. நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் வாழ்க்கை சிக்கலையும், அதனால் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்ல போவதுதான், இக்கதையின் சாராம்சம்.
இத்தொடரின் கதை, திரைக்கதையை எழுத்தாளர் தேவி பாலா எழுத, வசனத்தை பிரசன்னா எழுதுகிறார். விக்ரமன் ஒளிப்பதிவு செய்கிறார். பல வெற்றித் தொடர்களை இயக்கிய எம்.கே.அருந்தவராஜா இயக்குகிறார்.
‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழிக்கு ஒரு புது அர்த்தத்தை கொடுத்திருக்கிறார் இதன் கதாசிரியர். இத்தொடரை காணப் போகும் தாய்மார்கள் இத்தொடரில் வரும் பிரச்சனைகள், தங்கள் வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பதாக, அவர்களை உணர வைக்கும்விதத்தில், திரைக்கதை அமைத்திருப்பதாகச் சொல்கிறார் தொடரின் கதாசிரியரான எழுத்தாளர் தேவிபாலா.
ராடான் மீடியா ஒர்க்ஸின் ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ் திருமதி. R.ராதிகா சரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த புதிய தொடரின் இயக்குனரும், கதாசிரியரும் இனணந்து இந்த குடும்பத் தொடருக்கு புதிய மெருகை ஏற்றியுள்ளனர். பல உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களையும், திடீர் திருப்பங்களையும் உள்ளடக்கிய இத்தொடர் இமாலய வெற்றி அடைவது நிச்சயம் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.
உங்கள் சன் டிவியில் வரும் நவம்பர் மாதம் 3–ம் தேதி முதல், தினமும் திங்கள் முதல் சனிக்கிழமைவரை பகல் 1.30–க்கு ‘தாமரை’ தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.
காணத் தவறாதீர்கள்.