‘தலைவி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது

‘தலைவி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள ‘தலைவி’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விப்ரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சென்சாரில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விரைவில் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளும் சென்சாருக்கு அனுப்பப்படும் என்று படக் குழு தெரிவித்துள்ளது.

Our Score