அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘குற்றம் 23.’
இத்திரைப்படத்தை தனது ‘ரெதான் – தி சினிமா பீப்பள்’ நிறுவனம் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – மகிழ் திருமேனி, தயாரிப்பு – இந்தெர்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – ஷ்ரிகாந்த், கலை இயக்கம் – அமரன், இசை – அருண்ராஜ், பாடல்கள் – மதன் கார்க்கி, சண்டை இயக்கம் – அன்பு, அறிவு, நடனம் – தினேஷ், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் – ஆர்.பி.பாலகோபி, ஈ.இளங்கோவன், ஒலிப்பதிவு – டி.உதயக்குமார், ஒலி வடிவமைப்பு – சூரன், அழகியகூத்தன், உடை வடிவமைப்பு – பிரதிஷ்டா, ஸ்டில்ஸ் – அஜய் ரமேஷ், வி.எஃப்.எக்ஸ் – பிரசாத், விளம்பர டிஸைன்ஸ் – சசிதரன், உடைகள் – பி.ஆர்.கணேசன், ஒப்பனை – ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.
இயக்குநர் மகிழ் திருமேனி-அருண் விஜய் கூட்டணியில் உருவான ‘தடையறத் தாக்க’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் ‘தடம்’ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது ‘தடம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியது. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘தடம்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.