full screen background image

தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், ரோட்டரி கிளப்பும் இணைந்து தடுப்பூசி போடும் முகாமை இன்று காலை பிலிம் சேம்பர் வளாகத்தில் நடத்தின.

இந்தத் தடுப்பூசி முகாமை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மற்றும் ரோட்டரி கிளப், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர்கள் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பேடேரஷன் தலைவர் தாணு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரகார, கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், fefsi நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துt கொண்டார்கள்.
 

இந்த நிகழ்ச்சியின்போது சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பத்து லட்சம் ரூபாய் நன்கொடையையும் வழங்கினார்கள்.

Our Score