இயக்குநர் வேல்ராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘டீ கடை ராஜா’ என்கிற பாடல் வரியை தலைப்பாக கொண்டு புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தை ராஜா சுப்பையா இயக்கி அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார், ‘உ’ படத்தில் நடித்த நாயகி நேஹா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடி நடிகராக நடிக்கிறார். மதன் பாப் மற்றும் பாடகி அனுராதா கிருஷ்னமூர்த்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
இது ஒரு காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை பன்டூன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘வெண்ணிலா வீடு’ படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டன.










