ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் ‘டாடா’.
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் – சண்முக ராஜ்.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே நல்ல விலைக்கு படம் விற்றிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் அப்படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டுப் பிறப்பை ஒட்டி உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அதோடு இப்படம் 2023 சனவரியில், அதாவது இம்மாதமே வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









