full screen background image

தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது

தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது

திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் வருடா வருடம் வழங்கப்படும் தமிழக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கண்டு கொள்ளப்படாமல் இருந்த இந்த விருதுகளுக்கான தேர்வாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியே 2015-ம் ஆண்டுதான் துவங்கியது.

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களை 2017-ம் ஆண்டுதான் அறிவித்தார்கள்.

அறிவித்த பின்பும் ஏனோ கலைஞர்களுக்கு விருதுகளைக் கொடுக்காமல் தட்டிக் கழித்தபடியே வந்தார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் கடைசிக் கட்டத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலைமாமணி விருதுகளே வழங்கப்பட்டன. 

தொடர்ந்து திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருந்த சூழலில் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட.. இந்தப் பரிசளிப்பு விழா அப்படியே நின்று போயிருந்தது.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளுக்குப் பின்பு இப்போதுதான் இந்தக் கலைஞர்களுக்கு விடிவு காலமே வந்திருக்கிறது. 

வரும் செப்டம்பர் 4-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரையிலான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறதாம்.

இதற்கான அழைப்பிதழ்கள் விருது பெறும் கலைஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விருது பெறும் கலைஞர்களின் பட்டியல் இதோ :

Our Score