“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..!

“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..!

“நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது.

சிம்புவின் நடிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையினை தராததால் “அந்தப் படத்தை வெளியிட வேண்டாம்” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அளித்தது.

இதையடுத்து சிம்புவின் தரப்பில் டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் பரஸ்பரம் தங்களது தரப்பு நியாயத்தை பத்திரிகையாளர்களிடத்தில் எடுத்து வைத்தார்கள்.

ஆனாலும், இன்று மாலைவரையிலும் சிம்பு நஷ்ட ஈட்டுத் தொகையினை தராததால், இன்று இரவு அவசரமாக கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு சிம்புவின் படங்களுக்கு இன்று முதல் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் சிம்புவை நடிக்க வைத்து படங்களை இனிமேல் தயாரிக்க மாட்டார்கள். மற்றைய மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சிம்புவை வைத்து படமெடுத்தால் பெப்சிக்கு கடிதம் கொடுத்து அந்தப் படப்பிடிப்பை நிறுத்தவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயங்காது என்றே தோன்றுகிறது.

எனவே, சிம்பு தரப்பினர் இந்தப் பிரச்சினையில் எப்படியாவது இறுதி முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Our Score