full screen background image

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தலைவராக தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

tfpc-logo-poster-2

இவர்களது பதவிக் காலம் அடுத்த மாதத்தோடு முடிவடைவதால் புதிய தேர்தல் நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. நேற்று இரவு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலை வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தில் இப்போது 1201 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளித்து 1 தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், 1 பொருளாளர், மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள்.

Our Score