full screen background image

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிப்பு..!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிப்பு..!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இச்சங்கத்தின் தலைவராக விக்ரமனும், செயலாளராக ஆர்.கே.செல்வமணியும் சேவையாற்றி வருகிறார்கள். இவர்களது தலைமையின் கீழ் சங்கம் பலவித நன்மைகளை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு செய்திரு்பபதால் தேர்தல் நடத்தாமல் இவர்களையே தொடர்ந்து பணியாற்றும்படி சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இயக்குநர்கள் விக்ரமனும், ஆர்.கே.செல்வமணியும் இக்கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் எ்ன்று சொல்லிவிட்டதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

tantis-office

இது குறித்து தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2015-2016-ம் ஆண்டிற்கான தேர்தல் அறிவிப்பு

தேர்தல் அதிகாரி :ச.செந்தில்நாதன், B.A, B.L.,

(வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்)

கைபேசி : 9444082180 / 9444453842

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 5-ம் தேதியன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.

தலைவர் – 1, துணைத் தலைவர்கள் – 2, பொதுச் செயலாளர் – 1, இணைச் செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1. மேலும் செயற்குழு உறுப்பினர்கள் – 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

1. வேட்பு மனு கட்டணம் – ரூ.100

2. வேட்பாளர் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை (Deposit)

அ) தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு ஒவ்வொரு வேட்பு மனுவிற்கும் -ரூ.2,000

ஆ) செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூ.1000

தேர்தல் அட்டவணை

அ) வேட்பு மனு விநியோகம் ஜூன் 19, வெள்ளிக்கிழமை.

வேட்பு மனு தாக்கல் ஜூன் 20, சனிக்கிழமை முதல் ஜூன் 22 திங்கள்கிழமைவரை.

ஆ) வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – ஜூன் 23, செவ்வாய்கிழமை.

இ) வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் – ஜூன் 24 புதன்கிழமை மற்றும் ஜூன் 25 வியாழக்கிழமை

ஈ) வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடு ஜூன் 26, வெள்ளிக்கிழமை 

உ) தேர்தல் நாள் ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அன்றே முடிவுகள்அறிவிக்கப்படும்.

தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.

தேர்தலை பொறுத்தவரையில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது.

இப்படிக்கு

தேர்தல் அதிகாரி

விக்ரமன் (தலைவர்)

ஆர்.கே.செல்வமணி (பொதுச் செயலாளர்)

வே.சேகர் (பொருளாளர்)

குறிப்பு ;

2014 ஆம் ஆண்டு சந்தாவை செலுத்தியவர்கள் மட்டுமே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும். சந்தா செலுத்தாதவர்கள் வாக்களிக்க முடியாது. 2014-ம் ஆண்டுக்கான சந்தாவைச் செலுத்த கடைசி தேதி 15-06-2015.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2014-ம் ஆண்டு சந்தாவோடு, 201-ம் ஆண்டு சந்தாவையும் செலுத்தியிருக்கவேண்டும். சந்தா செலுத்த வேண்டிய கடைசி தேதி 15-06-2015 ஆகும். 2015-ம் ஆண்டுக்கான சந்தா பாக்கி இருப்பவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது.

தேர்தல் குறித்த மேலதிக தகவல்களைப் பெற www.tantis.org என்ற இணையதளம் மற்றும் tantistantis facebook பக்கத்திற்குச் சென்று பார்க்கவும்.

குறிப்பு :

வாக்காளர் பட்டியல்  வெளியீடு – ஜூன் 15, திங்கள்கிழமை

வாக்காளர் பட்டியல் திருத்தம் – ஜூன் 20, சனிக்கிழமை

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு – ஜூன் 25, வியாழக்கிழமை

Our Score