full screen background image

தமன்னா அறிமுகமாகும் மலையாளப் படம் துவங்கியது..!

தமன்னா அறிமுகமாகும் மலையாளப் படம் துவங்கியது..!

நடிகை தமன்னா முதன்முதலாக மலையாள தேசத்தில் கால் வைத்திருக்கிறார். அவர் முதன்முதலாக நாயகியாக நடிக்கும் மலையாளப் படம் இன்று துவங்கியது.

நடிகை தமன்னா 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி என்று 4 மொழிகளிலும் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ஆனால் மலையாளப் படங்களில் மட்டும் அவர் நடிக்கவில்லை. இப்பொழுது அந்தக் குறையும் தமன்னாவுக்கு தீர்ந்துவிட்டது.

அவர் நடிக்கும் முதல் மலையாளப் படம் இன்று கேரளாவில் துவங்கியது. தமன்னாவின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் திலீப் நடிக்கிறார். ‘ராம் லீலா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய அருண் கோபி இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘புலி முருகன்’, ‘சிஐடி மூஸா’ போன்ற படங்களுக்குக் கதை எழுதிய உதய்கிருஷ்ணா இந்தப் படத்திற்குக் கதை எழுதியிருக்கிறார். ‘ராம் லீலா’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஷாஜி குமார் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்டை’, ‘பீஷ்ம பர்வம்’ போன்ற படங்களுக்கு படத் தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷன் படத் தொகுப்பு செய்கிறார். சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இந்தப் படத்தை வினாயகா அஜீத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை கொச்சியில் கொட்டாரக்கார கணபதி கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திலீப், தமன்னா, இயக்குநர் அருண் கோபி, நடிகர் சித்திக் மற்றும் படக் குழுவினருடன் திலீப்பின் ரசிகர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் துவங்குகிறது.

Our Score