‘காதலன்’ படத்தின் ‘ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் ஆங்கில மியூஸிக் ஆல்பத்தில் இடம் பெறுகிறது..!

‘காதலன்’ படத்தின் ‘ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் ஆங்கில மியூஸிக் ஆல்பத்தில் இடம் பெறுகிறது..!

அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற ராப் பாடகர் வில்லியம் ஆடம்ஸ். 39 வயதாகும் இவர் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர். இவர் வெளியிடும் பாடல்களுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கும். பாடகர், பாடலாசிரியர், கம்போசர், பாடல் ரிக்கார்டு தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர், ராப் பாடகர், தொழிலதிபர் என பலவித அவதாரங்கள் எடுத்துள்ளார்.

இவர் தற்போது தான் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் ‘பர்த்டே’ என்னும் ஆல்பத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் மெட்டில் ஒரு பாடலை பாட விரும்பியுள்ளார். இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் 90-களில் இசையமைத்து வெளியிட்ட பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த வில்லியம் ஆடம்ஸை இரண்டு பாடல்கள் மிகவும் கவர்ந்துவிட்டன. ஒன்று ‘காதலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பேட்டை ராப்’ என்ற பாடல். மற்றொன்று அதே படத்தில் இடம் பெற்ற ‘ஊர்வசி ஊர்வசி’ என்ற பாடல்.

இவை இரண்டையுமே தன்னுடைய மியூஸிக் ஆல்பத்தில் இணைக்க விரும்பி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டிருக்கிறார். அவரும் அனுமதி வழங்க.. இதில் ‘ஊர்வசி ஊர்வசி’ என்னும் பாடலை தனது ஆல்பத்தில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறார். வில்லியம் ஆடம்ஸ். இந்த ‘பர்த்டே’ ஆல்பத்திற்காக ஊர்வசி பாடலை, ஆங்கிலத்தில் எழுதவும், இணை கம்போஸாரக இருக்கவும் ஏ.ஆர்.ரஹ்மாமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக ரஹ்மானுக்கு ஊதியமாக மிகப் பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஏ.ஆர்.ரஹ்மானும் தனது முகநூல் பக்கம் மற்றும் டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு கம்போஸருடன் இணைந்து பணியாற்றுவதில் தான் பெருமைப்படுவதாக ரஹ்மான் கூறியுள்ளார்.

Our Score