full screen background image

S.J.சூர்யா-யாஷிகா ஆனந்த் நடித்த ‘கடமையை செய்’ படத்தை டி.ராஜேந்தர் வெளியிடுகிறார்

S.J.சூர்யா-யாஷிகா ஆனந்த் நடித்த ‘கடமையை செய்’ படத்தை டி.ராஜேந்தர் வெளியிடுகிறார்

மிகவும் வித்தியாசமான  கதாபாத்திரங்கள் மற்றும் கதைக் களத்துடன் இம்மாதம் வெளியாக உள்ளது கடமையை செய்’ என்ற திரைப்படம்.

இந்தப் படத்தை கணேஷ் எண்ட்டெர்டெயின்மெண்ட்  & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் T.R.ரமேஷ் & ஜாகிர் உசேன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் S.J.சூர்யா,  யாஷிகா ஆனந்த், மொட்டை’ ராஜேந்திரன்,  வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், சேஷு, ராஜசிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – அருண்ராஜ்,  படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B.,  ஒளிப்பதிவு – வினோத் ரத்தினசாமி,  எழுத்து &  இயக்கம் –  வேங்கட் ராகவன்.

சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் டி.ராஜேந்தர் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் ரசித்து, நெகிழ்ந்து படக் குழுவினரை மனதார பாராட்டியதோடு இல்லாமல் இந்தப் படத்தை உலகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்.

இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்கக் கூடிய மிக ஜனரஞ்சகமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்ததோடு,  இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு  ‘U’ சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரைவில் திரை அரங்கில் கண்டு களித்து கொண்டாடக் கூடிய கமர்ஷியல் சக்சஸாக அமையும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசியப்படுத்தி உள்ளதாகவும், இது நிச்சயமாக ரசிகர்களை  மிகவும் கவர்ந்து மிகப் பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும்  அளவிற்கு அனைவரும் தங்கள்  கடமையை செய்துள்ளதாக இயக்குநர் வேங்கட் ராகவன் தெரிவித்துள்ளார்.

Our Score